சென்னை, ஜூலை 1 - தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ் மறைவுக்கு திங்களன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பேரவை கூடியதும் இதற்கான இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவர் தனபால் வாசித்தார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்வு செய்யப்பட்ட குமாரதாஸ் மறைவுக்கு பேரவையில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியபின்னர் உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.