tamilnadu

தமிழகத்திற்கு ஒருகோடிக்கும் அதிகமான தடுப்பூசி ஒதுக்கீடு... மா.சுப்பிரமணியன்....

ஓசூர்:
தமிழ்நாட்டிற்கு வரும் செப்டம்பர் மாதம் 1,04,198,170 தடுப்பூசி மருந்தை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு 
மருத்துவமனைக்கு அசோக் லே லண்ட் நிறுவனம் சார்பில் ஒரு கோடியே இருபது லட்சம்  சிஎஸ்ஆர் நிதியிலிருந்து நிறுவப்பட்ட ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.அப்போது, மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தில் பயன் பெற்று வரும் நோயாளிகளை சூளகிரி ஒன்றியம் பார்த்த கோட்டா கிராமத்திற்குச் சென்று மருத்துகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,“ஒன்றிய அரசு செப்டம் பர் மாதம் 1,04,198,170 தடுப்பூசிகளை தமிழ் நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது” என்றார்.கிருஷ்ணகிரியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படுவதால் ஓசூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக சட்டமன்றத்தில் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச் சர் கூறினார்.கிருஷ்ணகிரியை இரண்டு மாவட்டங்களாக பிரித்து ஓசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து முதல்வர் பரிசீலனை செய்து முடிவு செய்வார் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

;