tamilnadu

img

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 600 கனஅடியாக அதிகரித்தது.

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. மேலும் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்தநிலையில் சனிக்கிழமையன்று (ஜூலை 18) ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. ஞாயிறன்று (ஜூலை 19) வினாடிக்கு 5 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.இதனிடையே கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச் சோடி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வராத வகையில் மடம் சோதனைச்சாவடியில் போலீசார் தடுப்பு அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

;