tamilnadu

img

ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,அக்.14- வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த 24 மணி  நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்க ளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருப்பூர்,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின்  சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சி யஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம்  பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 செ. மீட்டர் மழையும், நீலகிரி  மாவட்டம் கோத்தகிரி, சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

;