tamilnadu

img

எகிப்து வெங்காயம் இருதய நோய்க்கு நல்லதாம்: செல்லூர் ராஜூ சொல்கிறார்

சென்னை, டிச. 12- எகிப்து வெங்காயத்தில் மருத்துவ குணம் உள்ளதாகவும், இருதய நோய்க்கும் நல்லது என வும் கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் ராஜூ தெரிவித்துள் ளார். எகிப்து வெங்காயம் இத யத்துக்கு நல்லது என அமைச்சர்  செல்லூர் ராஜூ தெரிவித்துள் ளார். கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்த தால் அதன் விலை கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில் எகிப்தி லிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் வரத்தால் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் 30 குறை வாக விற்கப்படுகிறது.  இந்த சல்பர் வெங்காயம் பார்ப்பதற்கு பெரிதாக இருப்ப தால் அதை வாங்க மக்கள் தயக்  கம் காட்டி வருகின்றனர். இந்த  நிலையில் இதுகுறித்து கீழ்ப்பாக்  கத்தில் கூட்டுறவுத் துறை அமைச்  சர் செல்லூர் ராஜூ செய்தியா ளர்களிடம் கூறுகையில் எகிப்து  வெங்காயத்தில் சல்பர் அதிக மாக உள்ளது. காரமும் தூக்கல் சல்பர் அதிகமாக உள்ளதால் கார மும் தூக்கலாக இருக்கிறது. உடனே கெட்டுப்போகாது. மேலும் இது இதயத்திற்கு நல்லது.  எகிப்து வெங்காயத்தை முதல்வர்  அறுத்து சாப்பிட்டு சோதனை செய்துள்ளார்” என்றார்.

தற்போது மத்திய அரசு இறக்குமதி செய்துள்ள எகிப்து  வெங்காயத்தை 500 மெட்ரிக்டன் பெற ஒப்பந்தம் போடப்பட் டுள்ளது. ஓரிரு நாட்களில் எகிப்து  வெங்காயம் கூட்டுறவு கடை களில் விற்பனை செய்யப்படும். எகிப்து வெங்காயத்தை வியா பாரிகள் நேரடியாக இறக்குமதி செய்து விற்கிறார்கள். அந்த வெங்காயத்தை பற்றி பொது மக்கள் இடையே பீதி ஏற்படுத்த வேண்டாம்.பொதுமக்கள் தயங்காமல் வாங்கி பயன்படுத்த லாம் என்றும் அவர் கூறினார். சென்னையில் 500 நியாய விலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் படிப்படியாக விலை குறையும். கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் 57 லாரிகளில் வெங்காயம் வந்துள்ளது. ஆந்திரா, மராட்டி யம், கர்நாடக, மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்து வருவதால் இனி  விலை குறையும். தொடர்ந்து விலை ஏறினால் பொது இடங்களில் நடமாடும் வாக னத்தின் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றில் நீர்  ஆவியாவதை தடுக்க தெர்மா கோல் ஷீட்டுகளை போட்டு சமூக வலைதளங்களில் வைரலானார். அது போல் டெங்கு காய்ச்சல் அதிகரித்த போது மக்கள் தங்  கள் வாசலில் மாட்டு சாணத்தால்  மொழுகினால் டெங்கு காய்ச்சல் வராது எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இது  போல் அவ்வப்போது புதிய தக வல்களைக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார். இதனால் அவரை அறிவியல் விஞ்ஞானி செல்லூர் ராஜூ என  நெட்டிசன்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.