tamilnadu

img

என்றைக்காவது கண்டித்தது உண்டா? பேரா.காதர்மொய்தீன், அகில இந்திய தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சட்டத்திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பு அமையவில்லையென்றால், மக்களின் எழுச்சி நாடு முழுவதும் பரவி பாஜக ஆட்சி வீழும். பாஜக-விற்கு எதிராக 67 விழுக்காடு மக்கள் கடைபிடிக்கும் ‘இந்தியத்துவம்’ காப்பாற்றப்பட வேண்டும். வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் மதச்சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதால் குடியுரிமைசட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அந்த நாடுகளில் மதச்சிறுபான்மையினர் துன்புறுத்தப்பட்டதாக என்றைக்காவது மத்திய அரசு கண்டித்துள்ளதா? தூதரகம் மூலம் தலையிட்டுள்ளதா? ஐ.நா.சபைக்கு கொண்டு சென்றதா? நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதா? அரசை நடத்துகிறவர்கள் அறிவாளிகளாக இருந்தால் பதிலளிக்க வேண்டும். ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையை மக்களின் மனங்களை பிரிக்கும் வேலையை பாஜக செய்கிறது. இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒவ்வொரு மாநிலத்திலும், நகரத்திலும் போராட்டங்கள் தொடர வேண்டும்.

;