tamilnadu

img

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சிபிஎம் வரவேற்பு

சென்னை,ஆக.11-  குடும்பச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு நிகராக பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு என்கிற திருத்தம் 2005இல் இந்து வாரிசு சட்டத்தில் கொண்டுவரப்பட்டது.  2005க்கு முன்னாலேயே தந்தை இறந்து போன குடும்பங்களுக்கும் இது பொருந்துமா  என்கிற கேள்வியோடு போடப்பட்ட வழக்குகளில் கடந்த காலத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள்   ஒன்றுக்கொன்று சற்று முரண்பட்டு இருந்தன. தற்போதைய தீர்ப்பில், திருத்தம் 2005-ல் வந்தி ருந்தாலும் அதற்கு முன்னரே தந்தை இறந்து போன குடும்பங்களிலும் பூர்வீக சொத்தில் பெண்  வாரிசுகளும் சமமான பங்குதாரரே என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

பெண்களுக்கு அவர்களுடைய பூர்வீக சொத்தில் சம பங்கு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நெடுங்காலமாக கோரி வந்துள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.  பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கினை சட்டமாக்கிய மாநிலங்களில் தமிழகத்திற்கு முதன்மை பாத்திரம் உண்டு. 1989  ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதர வோடு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சூழ லில் பூர்வீக சொத்துடமையில் பெண் வாரிசு களுக்கான சம பங்கை பின் தேதியிட்டு உறுதிப் படுத்தி இருக்கக்கூடிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது, பாராட்டுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;