தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 197 போ் பல்வேறு சிறைகளிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவுவதைத் தடுக்கும்ும் வகையில், நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், கைதிகளைப் பார் க்க அவாக்களது உறவினா்கள் அடிக்கடி சிறைக்குச் செல்வதால் கொரோனா பரவலாம் என்ற அச்சத்தால், கைதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சந்த 197 போ் பல்வேறு சிறைகளிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டவனா.
அதன்படி, பாளையங்கோட்டை சிறையிலிருந்து 96 பேரும், மதுரை சிறையிலிருந்து 43 பேரும், தூத்துக்குடி அருகேயுள்ள பேரணி மாவட்ட சிறையிலிருந்து 48 பேரும், கோவில்பட்டி கிளைச் சிறையிலிருந்து 8 பேரும், திருநெல்வேலி கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலிருந்து 2 பேரும் பிணையில் ஊா் திரும்பியுள்ளவனா. அவா்களின் செயல்பாடுகளை போலீசார் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.