tamilnadu

img

கொரோனா பாதிப்பு ... மாவட்ட நிலவரம்...  திணறும் விருதுநகர்... 

சென்னை 
இன்றைய தமிழக கொரோனா பாதிப்பில் வழக்கம் போல சென்னையில் அதிகபட்சமாக 1,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 88,377 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்து திருவள்ளூரில் 366 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் 360 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 262 பேருக்கும், செங்கல்பட்டில் 256 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

மற்ற மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்:

கோவை  - 176
ராணிப்பேட்டை  - 173 
கன்னியாகுமரி  - 159 
மதுரை  - 158 
வேலூர்  - 154 
திருவண்ணாமலை  - 147
தேனி  - 131 
திருச்சி  - 127

மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே இன்றைய கொரோனா பாதிப்பு 100-க்கு மேல் உள்ளது. மற்ற மாவட்டங்களில் 100-க்குள் உள்ளது. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள விருதுநகர் மாவட்டம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 360 பாதிப்பு ஏற்பட்டிருப்பது தென் தமிழகத்தில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  

;