tamilnadu

img

இந்துத்துவா கும்பலின் வன்முறைக்கு சிபிஐ கண்டனம்

சென்னை, டிச.25- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா.  முத்தரசன் வெளியிட்ட அறிக்கை  வருமாறு:- குடியுரிமை திருத்தத் சட்  டத்தை திரும்பப் பெற வலி யுறுத்தி நாடு முழுவதும் பொது மக்களும், எதிர்க் கட்சிகளும் போராடி வருகின்றனர்.  அறிவியல் தலைநகரான பெங்களூரு மாநகரில் வர லாற்று அறிஞர்கள் முனைவர் ராமச்சந்திர குஹா அண்ணல் மகாத்மா காந்தி படம் ஏந்தி போராடியதை, பாஜக அரசின் காவல்துறை பலவந்தமாக தடுத்து கைது செய்தது. மங்களூரு நகரில் போரா டிய பொதுமக்கள் மீது துப்பாக்கி  சூடு நடத்தி 2 பேரை படுகொலை  செய்தது. சம்பவ இடத்தை பார் வையிடச் சென்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் எம்பியும், கட்சி மாநிலச் செய லாளரும் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் மக்கள் விரோ தச் செயலை கண்டித்து நடை பெற்று வரும் ஜனநாயக பாது காப்பு போராட்டத்தில் முனைப் போடு ஈடுபட்டு வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது பாஜக  இந்துத்துவா கும்பல் கொலை  வெறித் தாக்குதல் நடத்தி யுள்ளது. டிசம்பர் 24 அன்று இரவு 1.30  மணிக்கு மல்லேஸ்வரம் பகுதி யில் உள்ள இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி கர்நாடக மாநில தலைமை அலுவலகமான எஸ்வி  காட்டே பவன் மீது பெட்ரோல்  குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி யுள்ளனர். இதனால் அலுவ லகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாக னங்கள் எரிந்து சேதம் அடைந்துள் ளன. அலுவலகத்திற்கும் பலத்த  சேதம் ஏற்பட்டுள்ளது. நல்ல வேலையாக அலுவலகத்தில் இருந்தவர்கள் உயிர் பிழைத்துள்ளனர். பாஜக ஆட்சி அதிகாரத்தின் துணையோடு இந்துத்துவா குண்டர்கள் கட்சி அலுவலகம் மீது  நடத்தியுள்ள கோழைத்தனமான தாக்குதலை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லக் குழு வன்மையாகக் கண்டிக்கி றது. குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்து, கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

;