tamilnadu

img

முன்னாள் மேயர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு

நெல்லை,ஜூலை 26- நெல்லையில் கொலை செய்யப்பட்ட திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி வீட்டில் வெள்ளியன்று சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  ஜூலை 23ஆம் தேதியன்று  உமா மகேஸ்வரி வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரையும் அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மூவரையும் கொன்றனர்.  இதுவரை அவரது உறவினர்கள், நண்பர்கள் என 100 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் வெள்ளியன்று உமா மகேஸ்வரி வீட்டில் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். 6 பேர் கொண்ட இந்தக் குழு வீடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டது. கொலையானவர்களின் உடல்கள் கிடந்த இடங்களை புகைப்படங்களாக அவர்கள் பதிவு செய்து கொண்டனர். ஏற்கனவே சிபிசிஐடி விசாரணயில் உள்ள கொலை, கொள்ளை சம்பவங்களுடன், இந்த கொலை ஒத்துப் போகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காகவே வந்ததாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.