tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா தொற்று...  

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோயாளிகளாக மருத்துவமனைக்கு செல்கின்றனர். 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் ஒருவித கலக்கத்துடன் பொழுதை கழித்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,697 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. இன்று (செப்., 15) ஒரே நாளில் 68 பேர் பலியாகிய நிலையில், இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 8,502 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருந்த 5,735 பேர் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,58,900 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 46,806 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

சென்னை நிலவரம்...             

இன்றைய பாதிப்பு  - 989 

மொத்த பாதிப்பு  - 1,50,572

இன்றைய பலி - 20+

மொத்த பலி எண்ணிக்கை - 3,004 

;