tamilnadu

img

வேளாண் மண்டலம்: கே.எஸ்.அழகிரி வரவேற்பு

சென்னை,பிப்.10- காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை  மண்டலமாக அறிவிக்க போவதாக முத லமைச்சர் அறிவித்ததை வரவேற்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி,“காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க போவதாக முதலமைச்சர் அறிவித்ததை வர வேற்கிறேன். ஆனால் இதில் பெரிய அள வில் விவாதங்களும், ஆலோசனைகளும் செய்யப்பட வேண்டும். வேளாண்மை மண்டலம் என்று அறிவித்தால், அங்கு வேறு  தொழில்கள் செய்ய அனுமதி உண்டா என்பது தெரியவேண்டும். அனுமதி உண்டு என்றால் எந்த தொழில்கள் செய்யலாம்?. எந்த தொழில்கள் செய்யக்கூடாது? என்ற  விவரங்களை தொழில் சார்ந்த அறிஞர்கள்,  வேளாண் விஞ்ஞானிகள், அரசு அதிகாரி கள், எதிர்க்கட்சிகளுடன் கலந்து பேசி அறி விக்க வேண்டும். பிற தொழில்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் விவசாயிகள் வள மாக வாழ முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

;