tamilnadu

img

ஊரடங்கை மீறிய 64,733 பேர் கைது

சென்னை, ஏப்.5- தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 58,440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 64,733 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல்  அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்த ரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது.

ஊரடங்கு காரணமாக, பொது இடங்க ளில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது  காவல்துறையினரால் தடைசெய்யப் பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை யின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலை களுக்கும்,பொது இடங்களுக்கும் வரு கிறவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை 24 மணி  நேரத்தில் மொத்தம் 58,440 வழக்குகளைப்  பதிவு செய்து 64,733 பேரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனா?.