tamilnadu

img

உலகைச் சுற்றி... கோவிட் 19 வைரஸ் ஓர் அறிவியல் பிரச்சனை; அரசியல் அல்ல....

கோவிட்-19 தொற்று நோய் உலகளவில் பரவி வரும் போது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த டிரம்ப் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் ஊடகங்களும், குறிப்பிட்ட அரசியல் நோக்கத்துடன், பல்வகை சதித் திட்டத்துடன் வதந்திகளை பரப்பி வருகின்றனர். குறிப்பாக இவற்றில், கோவிட்-19 வைரஸ், சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து கசிந்தது என வதந்தி பரவலாகியுள்ளது.

சமீபத்தில், வுஹான் ஆய்வகத் தலைவர் வாங் யான்யீ “சி.ஜி.டி.என்” தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில், கோவிட்-19 குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்:

சி.ஜி.டி.என்: கோவிட்-19 வைரஸ், வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கசிந்தது என்ற கூற்று பற்றி உங்கள் கருத்து என்ன?

வாங் யான்யீ: இத்தகைய கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. வுஹான் ஆய்வகம், மிக முன்னதாகவே கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் தொடங்கி, முதல்முறையாக இந்த வைரஸை அறிந்து கொண்டது. அப்போது, காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி நோயின் மாதிரி என மட்டும் அழைத்தோம். பிறகு, இந்த வைரஸ்குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த மாதிரியில் முற்றிலும் புதிய ரக கொரோனா வைரஸ் பரவி இருப்பதைக்கண்டறிந்தோம். தற்போது, இந்த வைரசை கோவிட்-19 (SARS-CoV-2) என அழைக்கின்றோம். உண்மையில், இந்த புதிய ரக வைரஸ் பற்றி நாம் யாரும் அறிந்திருக்கவில்லை.

சி.ஜி.டி.என்: ஆனால், 2018ஆம் ஆண்டு ஏப்ரல், நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், வவ்வாலில் இருந்து புதிய ரக வைரஸ் பரவியதாக கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் உங்கள் ஆய்வகத்திலிருந்து இந்த தொற்று நோய் பரவலை ஏற்படுத்தியதா?

வாங் யான்யீ: உண்மையில், இதற்கு முன்பு கண்டறியப்பட்ட பல கொரோனா வைரஸ்களையும் ஆரம்பக்காலத்தில் புதிய ரக கொரோனா வைரஸ் என்று அழைப்பதுவழக்கம். எடுத்துக்காட்டாக, மெர்ஸ் (MERS), 2018ஆம் ஆண்டு ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கொரோனா வைரஸ், 2019ஆம் ஆண்டு கோவிட்-19 ஆகிய எல்லாமும்கண்டறியப்பட்ட ஆரம்பக் காலத்தில், புதிய ரக கொரோனாவைரஸ் என்ற அழைக்கப்பட்டது. இது, எளிதாக குழப்பத்தைஏற்படுத்தக் கூடியது. 2018ஆம் ஆண்டு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கொரோனா வைரஸ், பன்றிக் குட்டிகளின் வயிற்றுப்போக்கு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும். அதற்கு பின்னர், இந்த வைரசுக்கு சாட்ஸ்(SADS) என்ற பெயர் சூடப்பட்டது. அந்த வைரசுக்கும் கோவிட்-19 (SARS-CoV-2)க்கும் இடையே 50 விழுக்காடு ஒற்றுமை மட்டும் நிலவுகிறது. எனவே, இவற்றுக்கும் இடையே அதிக வேறுபாடு உண்டு.

சி.ஜி.டி.என்: கோவிட்-19 பரவல் ஏற்பட்ட பிறகு, புதிய வைரஸ் உருவானது குறித்து நீங்கள் செய்துள்ள ஆய்வுப் பணி என்னென்ன?

வாங் யான்யீ: சர்வதேசக் கல்வி சமூகத்தில் தற்போது, இந்த வைரஸ் இயற்கையின் ஒரு வனவிலங்கில் இருந்து உருவானது என்ற பொதுக் கருத்து உண்டு. ஆனால், உலகின் பல்வேறு இடங்களில் வெவ்வேறு வனவிலங்குகளில் எந்த வகை வைரஸ்கள் இருக்கும்? கோவிட்-19 நோயை ஏற்படுத்திய வைரசுடன் ஒப்பிடும் போது, எங்கு உள்ள வைரஸ் அதிக ஒற்றுமை உள்ளது? தற்போது, இந்த கேள்விகளுக்கான பதில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பதில்களைக் கண்டறியும் வகையில், உலகின் அறிவியலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். எனவே, வைரஸ் உருவானது என்பது, அறிவியல் ரீதியிலான பிரச்சனையாகும். இதற்காக, அறிவியல்பூர்வ தரவுகள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் அறிவியலாளர்கள் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

;