உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அமெரிக்காவில் 8,154,935 பேருடன் முதலிடத்திலும், இந்தியா 7,550,273 தொற்றுகளுடன் இரண்டாம் இடத்திலும், பிரேசில் 5,235,344 தொற்றுக்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 40 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், உலகம் முழுவதும் 40,000,234 நோய்த்தொற்றுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 1,113,896 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஏழு நாட்களில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தொற்றுக்கு பிறகு, இதுவரை தொற்றுகள் ஏற்படாத நிலையில் கடந்த வாரத்தில் சில தொற்றுகள் சீனாவில் ஏற்பட்டுள்ளது.