உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் அமெரிக்காவின் சாம் கிரிவ் 1.86 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியனும், இந்தியாவின் நட்சத்திர வீரருமான சரத்குமார் 1.83 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கத்தையும், ஒலிம்பிக் சாம்பியனான தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கத்தையும் வென்றனர். பதக்கம் வென்றதன் மூலம் சரத்குமார், மாரியப்பன் ஆகியோர் அடுத்தாண்டு ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள பாரா ஒலிம்பிக் போட்டித் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளனர்.