tamilnadu

img

மோடி ஆட்சியில் கங்கை நதி நீர் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் ஏற்றதாக மாறவில்லை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 

மோடி ஆட்சியில் கங்கை நதி நீரை குடிப்பதற்றும் குளிப்பதற்கும் ஏற்றதாக மாறவில்லை என்பது சுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 
கடந்த 2014ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலின் போது மோடி பாஜக ஆட்சிக்கு வந்தார் கங்கையை சுத்தப்படுத்துவோம் என்றார். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற மோடி கங்கையை சுத்தம் செய்யும் நமாமி கங்கா  திட்டத்தை அறிவித்தார்.  கங்கை சுத்திகரிப்புக்காக 2014 - 2018 இடையேயான காலகட்டத்தில் ரூபாய் 3,867 கோடி ஒதுக்கப்பட்டது என மாநிலங்களவையில் அமைச்சர் சத்யபால் சிங் கூறினார். இதையடுத்து கடந்த 2018ல் எந்தளவுக்கு கங்கை சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான தரவுகள் இல்லை என்று தகவல் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட ஆணவங்கள் மூலம் தெரியவந்தது.  இதற்கிடையில் கங்கையை சுத்தம் செய்ய வேண்டி, சுவாமி கியான் சுவரப் என்று அழைக்கப்பட்ட சூழலியல் பேராசிரியர் ஜி.டி. அகர்வால் கடந்தாண்டு 112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்நிலையில், கங்கை நதி மிக மோசமாக மாசுபாடு அடைந்துள்ளதாகவும், அதை நேரடியாக குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது  அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில், “

கங்கை நதி பாயும் வழியில் 86 இடங்களில் கண்காணிப்பு மையம் அமைத்திருந்தோம். அந்த இடங்களில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கங்கை நதி முழுவதும் வீரியம் மிகுந்த பாக்டீரியாக்கள் உள்ளன.  எனவே கங்கை நதியை குடிக்க, குளிக்க பயன்படுத்த இயலாது. மேற்கு வங்கத்தில் 2 இடங்கள் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் சில இடங்களில் நீரை சுத்தம் செய்துவிட்டு பருகலாம். 86 இடங்களில் வெறும் 18 இடங்களில் மட்டும் குளிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. 
இந்நிலையில் கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது  தமிழக பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கடந்த 2009-ல் காங்கிரஸ் ஆட்சியில் கங்கை நதியின் நிலை, 2019-ல் பிஜேபி ஆட்சியில் கங்கை நதியின் நிலை என கங்கை தூய்மையாக இருப்பது போன்று  வழக்கம் போல் போலியான புகைப்படத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கங்கை சுத்திகரிப்புக்காக 2014 - 2018 இடையேயான காலகட்டத்தில் ரூபாய் 3,867 கோடி ஒதுக்கப்பட்டது என மாநிலங்களவையில் அமைச்சர் சத்யபால் சிங் கூறினார்.
எந்தளவுக்கு கங்கை சுத்திகரிக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான தரவுகள் இல்லை என்கிறது 2018ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவல் உரிமைச் சட்ட தகவல்.
 

;