tamilnadu

img

சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான் கேட்கிறார் பயங்கரவாதிகள் செத்துவிட்டார்கள் சரி, இறுதி நிகழ்ச்சிகள் எங்கே?

புல்வாமாவில் ஜெய்ஷ்- இ- முகம்மது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. பாலகோட், சக்கோத்தி, முசாபாராபாத் ஆகிய பயங்கரவாத முகாம்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித்ஷா உள் ளிட்ட பாஜக தலைவர்கள் கூறினர். ஆனால், பாகிஸ்தான் அதனை மறுத்தது. இந்தியா தாக்குதல் நடத்தியது; பாகிஸ்தான் படைகள் பதிலடி கொடுத்தது இந்த இரண்டுமே உண்மைதான்; ஆனால், யாரும் கொல்லப்படவில்லை; ஆளில்லாத பகுதியில் தான் இந்தியப் படைகள் குண்டுகளை வீசிச் சென்றன என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார். சர்வதேச ஊடகங்களும், பாகிஸ்தான் கருத்தையொட்டியே செய்திகள் வெளியிட்டன. பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்றன. எனினும் இப்போதுவரை பாலகோட் தாக்குதலைச் சொல்லி, பிரதமர் மோடியும், பாஜகவினரும் வாக்கு சேகரித்துக் கொண்டி

ருக்கின்றனர். நாடு பாதுகாப்பாக இருக்க தங்களுக்கே வாக்களிக்க வேண்டும்; காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பது பாகிஸ்தானின் விருப்பம் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், “இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் பகுதிக்குள் 300 பேர் இறந்து போனார்கள் என்றால், அவ்வாறு இறந்தவர்களுக்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து இறுதிச் சடங்குகளை ஏன் நடத்தவில்லை?” என்று சமாஜ் வாதி கட்சித் தலைவர் ஆசம்கான் கேள்வி எழுப்பியுள்ளார். “உண்மையில் மிகப்பெரிய எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால், அவர்களுக்கான இறுதிச் சடங்குகள் நடை பெற்றிருக்க வேண்டுமல்லவா?” என்று குறிப்பிட்டிருக்கும், “இந்த விஷயத்தில் இந்திய அரசிடம் எதையும் கேட்க விரும்பவில்லை” என்றும்,பாகிஸ்தானிடமே இந்த கேள்வியை எழுப்புவதாகவும், வித்தியாசமான முறையில் ஆசம்கான் இப்பிரச்சனையைக் கையாண்டுள்ளார்.

;