tamilnadu

img

பாஜக வேட்பாளருக்கு நூதன சிக்கல்

லக்னோ, ஏப்.10-உத்தரப்பிரதேச மாநிலம், இட்டாவா மக்களவைத் தொகுதியில் பாஜகசார்பில் ராம்சங்கர் கதேரியா போட்டியிடுகிறார். இந்நிலையில், ராம்சங்கருக்கு எதிராக அவரதுமனைவியான மிருதுளாவே சுயேச்சையாக போட்டியிடுவது பாஜக வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகதனக்கு சீட் வழங்காததால், அக்கட்சிக்கு பாடம் புகட்டவே போட்டியில் இறங்கியிருப்பதாக மிருதுளா கூறியுள்ளார். இட்டாவா தொகுதியின் தற்போதைய எம்.பி.அசோக் டேக்ரே, தனக்குஇத்தொகுதியை வழங்கவில்லை என்று கூறி, அண்மையில் காங்கிரசுக்குத் தாவினார் என்பது குறிப் பிடத்தக்கது.

;