tamilnadu

img

மோடி விளக்கேற்ற சொன்னால் துப்பாக்கியால் சுட்ட பாஜக பிரமுகர்

கொரோனாவுக்கு எதிரான போரில் ஒற்றுமையை வெளிப்படுத்த மோடி நேற்று இரவு 9 மணிக்கு மின்சார விளக்குகளை அணைத்து அகல் விளக்கேற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 
இதனை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆனால் பல இடங்களில்  பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் சங்பரிவார் அமைப்பினர் நாட்டின் பல பகுதிகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஊர்வலமாக சென்றனர்.  இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்ராம்புர் மாவட்டத்தின் பாஜக மகளிரணியைச் சேர்ந்த மஞ்சி திவாரி என்பவர் நேற்றிரவு துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.