கிரேட்டர் நொய்டாவில் செயல்பட்டு வரும் என்பிசிஎல் துணை மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 148வது பிரிவில் நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் இன்று காலை எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.