tamilnadu

கூடலூர் அருகே யானை தாக்கி தொழிலாளி பலி

உதகை, நவ. 3– கூடலூர் அருகே யானை தாக்கி நகராட்சி ஊழியர் பலி யான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத் தையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூ ராட்சிக்குட்பட்ட குயின்ட் தனியார் தோட்டத்தில் வசித்து வருபவர் பாலசாமி. கூடலூர் நகராட்சியில் தினக்கூலி அடிப் படையில் பணிபுரிந்து வரும், இவர் தினமும்  தனது வீட்டில் இருந்து கூடலூர் சென்று  பணி முடிந்ததும் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். ஆனால்,  திங்களன்று பாலசாமி வெகு நேரமாகியும் வீட்டிற்கு  வராததால், பதற்றமடைந்த குடும் பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள பகுதிகளில் தேடிவந்தனர். இந்நிலையில், தனது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் யானை தாக்கியதால் உயிரிழந்த பாலசாமியின் உடல் சாலை ஓரத் தில் கிடப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த னர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக  கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தை  கடந்த ஆறு மாத காலமாக சாலை சரி இல்லை என்று காரணம் காட்டி நிறுத்தி விட்டனர். பேருந்து வசதி இல்லாத கார ணத்தால், வேலை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக ளுக்காக 20 கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே தான் செல்ல வேண்டும். அவ்வாறு செல்கையில் பாலசாமி யானை தாக்கி உயிரிழந்திருக்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் ஒரு பெண்ணை யானை மிதித்து கொன்றது.  இந்த யானையை இங்கிருந்து வனத்துறையினர் விரட்டிய நிலையில், மீண்டும் யானை இப்பகுதிக்கு வந்துள்ளது. இத னால் அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல அச்சமாக உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் மீண்டும் இப் பகுதியில் அரசு பேருந்தை இயக்க வேண்டும். உயிரிழந்த வர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.