tamilnadu

உதகை: கேரட் கழுவும் இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

உதகை, ஆக. 23 - நீலகிரியில் கேரட் கழுவும் மையங்களை விவசாயம் சார்ந்த தொழிலாக அங்கீகரிக்க வலியுறுத்தி கேரட் கழுவும் இயந்திரம் உரி மையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கேரட்  பரவலாக விவசாயம் செய்யப்படுகிறது.

இங்கு உற் பத்தியாகும் கேரட் கோவை, சேலம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல  பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படு கிறது. இதற்காக நாளொன்றுக்கு சரா சரியாக 10 டன்  கேரட் அறுவடை செய்யப் படுகிறது.

அறுவடை செய்யப்பட்ட கேரட் டைக் கழுவுவதற்கு மாவட்டத்தில் 60 சுத்தி கரிப்பு நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர்,  நீரோடைகளில் கலப்பதால் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்க வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவு றுத்தியுள்ளது.

இதையொட்டி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப் பட்டுள்ளது.  ஆனால், அவை சரியாக செயல்படா தால் உதகை மற்றும் கேத்தி ஆகிய பகுதி களில் இயங்கி வந்த சுத்திகரிப்பு நிலை யங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து சீல் வைக்கப்பட்ட நிலையங்களை மீண்டும் இயக்க அனுமதித்திட வேண்டும்

. கேரட் கழுவும் மையங்களை விவசாயம் சார்ந்த தொழிலாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்க வேண்டும். கேரட் கழிவுகளைக் கொட்டுவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட கேரட் கழுவும் இயந்திர உரிமை யாளர்கள் சங்கத்தினர் ஞாயிறு முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.

;