tamilnadu

img

குஜராத் மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த 2002ல் நடந்த குஜராத் மதக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2002ல் குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த மோடி ஆட்சியில் முஸ்லீம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக இந்துமத தீவிரவாதக் கும்பல்கள் திட்டமிட்டு வன்முறை வெறியாட்டங்களை நடத்தின. இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லீம் சிறுபான்மையின மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த கலவரத்தில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூர் கிராமத்தில் பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரையும் கொன்றது. அதோடு மட்டுமல்லாமல் அந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த சிலர் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை பாலியல் பலாத்காரம் செய்தனர்.


இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் நடந்ததை பற்றி பார்க்க எதுவும் இல்லை. இது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மறுவாழ்வு அளிக்க வேண்டிய நேரம் என கூறியது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகையாக 50லட்சம் ரூபாயை இரண்டு வார காலத்திற்குள் அளிக்கக்கோரி குஜராத் அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


;