tamilnadu

img

உச்சநீதிமன்ற தீர்ப்பு: ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமானது

சென்னை,பிப்.11- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் தலைவர் செல்லக்  கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- உத்தர்கண்ட் உயர்நீதி மன்ற  தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதி  மன்றம் அளித்துள்ள தீர்ப்பு தலித்,  ஆதிவாசி, ஓ.பி.சி மக்களின் உரிமைகளுக்கு விரோதமானது என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது. உத்தர்கண்ட் பொதுப் பணித்  துறையில் உதவி பொறியாளர் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு  வழங்குகின்ற மாநில அரசின்  முடிவு சம்பந்தமான வழக்கி லேயே இத்தகைய தீர்ப்பு வழங் கப்பட்டுள்ளது.  அரசியல் சட்டப் பிரிவு 16(4)  மற்றும் 16 (4 - அ) ல் இட  ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிடப்பட்டி ருப்பவை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி  பிரிவினருக்கான அடிப்படை உரி மைகளாக கருதப்பட முடியாது என தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சி யளிக்கிறது. இந்த விளக்கம் இட  ஒதுக்கீடு நாடு முழுமையும் அம லாக்கப்பட வேண்டிய சட்ட நியதி யையே கேள்விக் குறியாக்கி யுள்ளது.

மத்திய அரசு உடனடியாக உரிய சட்ட வழிமுறைகளை மேற்கொண்டு உச்ச நீதி மன்றத்தின் இத் தீர்ப்பின் பாதக  விளைவை சரி செய்ய வேண்டு மென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோருகிறது. இதற்கான குரலை இடதுசாரி,  ஜனநாயக, தலித், சமூக நீதி  இயக்கங்கள் இதற்கான  கருத்தாக்க முயற்சிகளில் உட னடியாக ஈடுபடவேண்டு மென்றும் கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு தெரிவித்திருக்கி றார்கள்.

சீராய்வு மனு: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல்.திருமாவள வன் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,“உத்தர்கண்ட் மாநி லத்தில் இடஒதுக்கீடு வழங்கப் பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ‘இட ஒதுக்கீடு  என்பது அடிப்படை உரிமை அல்ல. ஒரு மாநில அரசு விரும்பி னால் இட ஒதுக்கீடு வழங்கலாம் இல்லை என்றால் அவர்களை வற்புறுத்த முடியாது’ என்று தீர்ப்  பளித்துள்ளது. இது மிகப்பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கி றது. இந்த தீர்ப்பை எதிர்த்து உட னடியாக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.
 

;