tamilnadu

img

டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவில் தலையீடு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

உயர்நீதிமன்றம் டிக் டாக் செயலிக்கு விதித்த தடை உத்தரவில் தலையீடு செய்ய மறுப்பு தெரிவித்ததோடு வழக்கை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பைட்டான்ஸ் என்ற சீன நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஆன்லைனில் வீடியோக்களை பதிவிடும் ’டிக் டாக்’ என்ற செயலியை இயக்கி வருகிறது. இச்செயலியில் ஆபாச மற்றும் தேவையற்ற வீடியோக்கள் பரவுவதால் குழந்தைகள் பாதிப்படைவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஏப்ரல் 3ம் தேதி இந்த செயலியை தடைசெய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், இச்செயலியில் வரும் வீடியோக்களை ஒளிபரப்ப ஊடகங்களுக்கு தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.


உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தடை செய்யக்கோரி பைடான்ஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் டிக் டாக் செயலிக்கு விதித்த தடை உத்தரவில் தலையீடு செய்ய மறுப்பு தெரிவித்ததோடு வழக்கை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ’டிக் டாக்’ செயலிக்கு தடைவிதித்த வழக்கின் மறு விசாரணை நாளை நடைபெறவுள்ளது.


;