tamilnadu

img

சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில்  மேல் முறையீடு

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை  சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்சேர்ந்த சின்னச்சாமியின் மகள் கௌசல்யா உடுமையைச்சேர்ந்த சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
இந்நிலையில் கடந்த 2016 மார்ச் 13 அன்று கௌசல்யாவும் சங்கரும் அடையாளம் தெரியாத கும்பலால்  தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் சங்கர் மரணமடைந்தார். படுகாயங்களுடன் கௌசல்யா உயிர்பிழைத்தார். இந்த கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனையும் ஸ்டீபன் தங்கராஜ் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மணிகண்டன் என்பருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் அமர்வு நீதிமன்றம் கடந்த 2017ல் தீர்ப்பளித்தது. மேலும் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை  நீதிமன்றம் விடுதலை செய்தது . இதையடுத்து திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை  உள்ளிட்ட 8 பேர் தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சங்கர் கொலை வழக்கின் முதல் குற்றவாளியான  சின்னச்சாமி விடுதலை செய்யப்பட்டதோடு 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 
இதைத்தொடர்ந்து சின்னச்சாமி விடுவிக்கப்பட்டதற்கும் 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

;