tamilnadu

img

நிர்பயா வழக்கு : குற்றவாளியின் மனு தள்ளுபடி

புதுதில்லி,மார்ச் 17- தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொலை செய்தது.இதில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட உள்ளது. இந்த தூக்கு தண்டனையில் தப்பிக்க குற்றவாளிகள் நீதிமன்றத் தில் வழக்குக்கு மேல் வழக்கு போட்டு தண்டனையை தாமதப்படுத்தும் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.  இதில குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் தில்லி கூடு தல் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுமீது தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாயன்று வழங்கிய தீர்ப்பில், குற்றவாளி தாக்கல் செய்த மனுவில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.