tamilnadu

img

இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு பள்ளிபாளையம் கந்துவட்டி கும்பலை சேர்ந்த நபருக்கு 34 ஆண்டு சிறை

விஎச்பி அமைப்பைச் சேர்ந்தவர்

நாமக்கல், ஜூலை 23- பள்ளிபாளையத்தில் இளம்பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறவு செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் கந்துவட்டி கும்பலைச் சேர்ந்தவனுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றவாளி விஎச்பி  அமைப்பைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையம் பகுதியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இத்தகைய விசைத்தறி தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர் குடும்பங்களின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டி கும்பல் கடன் கொடுத்து வட்டி பெறுவது என்கிற பெயரில் சுரண்டி கொழுத்து வந்தது. இவ்வாறு கந்துவட்டி கும்பலின் கொடூரத்தால் பல குடும்பங்கள் சீரழிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு இவ்வாறு கடன் பெற்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்னை கந்துவட்டி கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. இதன்பின் பணத்தை கட்டமுடியாத கையறு நிலையில் கண்கலங்கி நின்ற அந்தப் பெண்ணை அப்படியே இழுத்து கொண்டு போய் ஓர் அறையில் அடைத்து தனது பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவரை விட்டு  பாலியல் வல்லுறவு செய்தனர். 

டியோவில் பதிவு செய்து, அதனை கந்துவட்டி கும்பலின் உரிமையாளார் ஒரு இணையதளத்திற்கு விலைபேசி விற்றுள்ளார். இணையதளத்திலும், செல்போன்களிலும் இந்த காட்சி பரவியதை அறிந்து அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் அக்குடும்பத்தினர் புகார் அளித்தும், கந்துவட்டி கும்பலின் செல்வாக்கின் காரணமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து கந்துவட்டி கும்பலின் பாலியல் வக்கிரத்திற்கு ஆளான குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கட்சியின் உதவியை நாடி வந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியின் சிபிஎம் கிளைச்செயலாளரான வேலுச்சாமி,  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு உரிய நீதி வேண்டியும், அந்த கும்பலை கைது செய்து  சட்டப்படி தண்டிக்கவும் பெரும் முயற்சி மேற்கொண்டார். இதனால் பெரும் ஆத்திர மடைந்த அந்த கந்துவட்டி கும்பல் வேலுச்சாமிக்கு தொடர் மிரட்டல் விடுத்து வந்தனர். குறிப்பாக, வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்து சென்ற  நிலையில், அதுதொடர்பாக மீண்டும் காவல்நிலை யத்தில் புகார் அளித்துவிட்டு வீடு திரும்புகையில் கடந்த 2010 ஆண்டும் மார்ச் மாதம் 10 ஆம் தேதியன்று வேலுச்சாமியை, கந்துவட்டி கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. 

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த தல சிவா என்கின்ற சிவக்குமார் ( இவர் விஷ்வ இந்து பரிசத் (விஎச்பி) அமைப்பின் மாவட்ட துணை செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்குகள் நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்நிலையில், இளம்பெண்னை கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில் வியாழனன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட தல சிவா (எ) சிவக்குமார் குற்றவாளி என்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இளம்பெண்ணை கடத்தியதற்காக 10 ஆண்டு சிறையும், பாலியல் வல்லுறவு செய்ததற்காக 10 சிறையும், அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக 4 ஆண்டு சிறை தண்டனை, கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை என மொத்தம் 34 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

;