tamilnadu

img

தில்லியில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டண உயர்விற்கு தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு இடைக்கால தடை

தில்லி உயர்நீதிமன்றம் தனியார் பள்ளிகள் இடைக்கால கட்டண உயர்வை மேற்கொள்ள தடைவிதித்து ஏப்ரல் 8ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.


தலைநகர் தில்லியில் உள்ள அரசு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் 7வது ஊதிய குழுவை அமுல்படுத்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை இடைக்காலமாக உயர்த்துவதற்கு தில்லி உயர்நீதிமன்ற தனிநபர் நீதிபதி அமர்விடம் அனுமதி பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.


இந்த மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் ஐ.எஸ். மேதா அமர்வு தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்த முந்தைய தீர்ப்பிற்கு இடைக்கால தடைவிதித்துள்ளது. அரசு உதவி பெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பாட்டு குழு இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கூறி அதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 8ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு வழக்கு விசாரணை முடியும் வரை தனியார் பள்ளிகள் எந்தவித கல்வி கட்டண உயர்வை மேற்கொள்ள கூடாது எனவும் தெரிவித்துள்ளது.


;