மதுரை, ஜூன் 26- கொரோனா தடுப்பில் முன்களப் பணியாற்றுபவர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், மதுரையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. தமிழக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 54.434 காவலர்களுக்கு 54,434 முகத்தை மறைக்கும் மாஸ்க் வழங் கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் சி.என்.பிரகாஷ், புகழேந்தி பிறப் பித்த உத்தரவு : தமிழகத்தில், அனைத்து காவலர்களுக்கும் முழு முகத்தை மறைக்கும் முழு மாஸ்க் (பேஷ் ஷீல்ட்), கையுறை வழங்க வேண்டும். காவல்துறையினர் முழு முகக்கவசம் அணிவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உறுதிப் படுத்த வேண்டும். அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்கள் மாஸ்க், கையுறை அணிந்து பணியாற்று வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.