tamilnadu

img

சிறைவாசிகளுக்கு கொரோனா

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் சிறைச்சாலையில் உள்ள ஆறு சிறை வாசிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சிறைக் கண்கா ணிப்பாளர் ராகேஷ் குமார் பங்கரே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள் ளார். ஏப்.14-ஆம் தேதி நான்கு சிறை வாசிகளுக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டு மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையின் மார்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு வயது 28 முதல் 34 வயது வரை இருக்கலாம். தற்போது இந்த எண் ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ள தால் சிறைக் கண்காணிப்பாளர் உள் ளிட்ட மற்ற சிறைவாசிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

1,230 சிறைவாசிகள் மட்டுமே அடை க்கப்படும் திறன் கொண்ட மத்திய சிறை யில் தற்போது சுமார் 2,200 பேர் அடை க்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைகள் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, சிறைவாசிகள் சமூக விலகலை கடை பபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முகக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளன.