ஈரோடு, நவ.15- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கனிசாமான அளவு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.
இந்த அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.
இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதியாக உள்ள நீலகிரியில் பெய்யும் வடகிழக்கு பருவ மழையால், அணையின் நீர்மட்டம் கனிசமான அளவில் உயர்ந்து 96 அடியாக உள்ளது. மேலும், அணையின் நீர்வத்து 1,061 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.