ஈரோடு, ஜூலை 16- மாற்று இடம் வழங்கக் கோரி ஜவுளி வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டனர். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் கனிமார்க்கெட் ஜவுளிசந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை, தினசரி சந்தை என ஆயிரத்து 50 கடைகள் செயல் பட்டு வருகிறது. இந்தக் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ரகசியமாக திங்களன்று நடந் துள்ளது. இதனையடுத்து கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த நூற் றுக்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். கடை களை காலி செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல், தற்போது ஆடி மாத விற்பனை மற்றும் தீபாவளி விற்பனைக் காக கடன் வாங்கி துணிகளை கொள்முதல் செய்துள்ள நிலையில் கடைகளை அகற் றினால் கடனைத் திருப்பிச் செலுத்த முடி யாத நிலை ஏற்படும். தங்கள் வாழ்வாதா ரத்தை பாதிக்கும் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் மனு அளித்துள்ளனர்.