tamilnadu

ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு புகார் ஆதாரமற்றது.... பள்ளிக்கல்வி அமைச்சர் கூறுகிறார்

ஈரோடு:
ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது என்றும் புள்ளிவிபரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் தனியார்கல்லூரி விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆசிரியர் தகுதித்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது. புள்ளி விபரங்களுடன் புகார் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகத்தில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் திட்டம் முதன் முதலில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில்  சிறுபான்மையினர் நலனுக்காக பல திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் முன்னேற்றத்திற்கு 78 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

;