tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆய்வு

ஈரோடு, செப்.5- ஈரோடு மாவட்டத்தில் பல் வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முதன்மைச் செயலர், வணிக வரி  மற்றும் பதிவுத் துறை மற்றும் கண் காணிப்பு அலுவலர் கா.பாலச் சந்திரன் வியாழனன்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாநகராட்சி பகுதிக ளான வைரபாளைத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், அமைக் கப்பட்டுள்ள மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுக்கும் பணி மற்றும் பீளமேடு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.23 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் கழிவு நீர்  சுத்திகரிப்பு நிலையம் ஆகிய வற்றை பார்வையிட்டு கா.பாலச் சந்திரன் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, மொடக் குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட லக்காபுரம் ஊராட்சி ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ரூ.2.18 லட்சம் மதிப்பீட் டில் அமைத்து வரும் பண்ணை குட்டை, நஞ்சை ஊத்துக்குளி, ஈ.பி நகர் பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மரம் வளர்த் தல் பணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பு, காங்க யம்பாளையத்தில் முதலமைச்ச ரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீடு போன்ற வற்றை ஆய்வு செய்தார். மேலும், தமிழ்நாடு முதலமைச் சர் நீர் மேலாண்மையின் முக்கி யத்துவத்தை உணர்ந்து, மழை நீர் சேகரிப்பை சேமிக்கவும், நீர் நிலைகளின் கொள்ளளவினை அதிகப்படுத்தி பாதுகாக்கவும், இதற்கென அனைத்து ஏரிகளி லும், குளங்களிலும், குட்டைக ளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டு என குடிமராமத்து என்ற திட்டத்தினை அறிவித்து துவக்கி வைத்தார். அதன்படி, குடிமராமத்து திட்டத்தின்கீழ் நஞ்சை ஊத்துக்குளி, பழமங்கலம், குட்டப்பாளையம் ஏரி ரூ.1.63 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி தூர் வாரப்பட்டு வரும் பணி, மொடக்குறிச்சி பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் ஊஞ்சலூர் வாய்க்கால் பராமரிக்கப்பட்டு வரும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் மொடக்குறிச்சி பேரூராட்சியில் குடிநீர் வடிகால்  வாரியத்தின் சார்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.1.50  லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள தரைமட்டத்தொட்டி, மொடக்குறிச்சி ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளி அங்கன்வாடியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் நடைபெற்று வரும் போஷன் அபியான் திட்டத் தின் ஒரு பகுதியான குழந்தைக ளுக்கு எடை பார்க்கும் முகாம் என ரூ.24.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) முனைவர் மு.பாலகணேஷ், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஜயசங்கர் உள் ளிட்ட  பலர் உடனிருந்தார்.

;