tamilnadu

ஈரோட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.200 மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தகவல்

ஈரோடு, டிச. 9- சமையலில் தவிர்க்க முடியாத பொருளாக உள்ள வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 25-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயத்தை பொது மக்கள் ரூ.120 கொடுத்து வாங்கிச் சென்றனர். ஆனால் விலை படிப்படியாக உயர்ந்து பெரிய வெங் காயம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகி றது. ஈரோடு நேதாஜி தினசரி காய் கறி மார்க்கெட்டுக்கு திங்களன்று  காய்கறி வாங்கச் சென்ற பெண் கள் கூறுகையில், வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் இப்படி உயர்ந்து கொண்டே சென்றால் நாங்கள் எப்படித்தான் சமையல் செய்வது என்றே தெரியவில்லை.  எனவே வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசு கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இது குறித்து வெங்காய வியா பாரி கூறுகையில், புனே மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட் டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப் படுகிறது. தற்போது அங்கும் வெங் காயம் தட்டுப்பாட்டில் உள்ள தால் ஈரோட்டிற்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது. வரும் வெங்கா யத்தை நாங்கள் உலர வைத்து பக்கு வப்படுத்தி விற்பனை செய்து வருகி றோம். பொதுவாக ஈரோடு மாவட் டத்தில் வெங்காயத்தின் தேவை குறைந்த அளவில் தான் இருக்கும். அதனால் தற்போது அதைக்கூட  பூர்த்தி செய்ய முடியாத நிலை உள் ளது. ஈரோடு நேதாஜி தினசரி காய் கறி மார்க்கெட்டில் திங்களன்று  பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 180 முதல் ரூ.200 வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையும் விற்பனை யானது. வெங்காயத்தின்வரத்து குறைந்தால் இன்னும் விலை உயர  வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.