tamilnadu

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுக ஜன.5-ல் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன. 1- ஈரோட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியு றுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஜன. 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஈரோட்டிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடதுசாரி கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ், மாவட் டக்குழு உறுப்பினர் எச்.ஸ்ரீராம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதில் தேசிய குடியுரிமை திருத் தச் சட்டத்தை திரும்பப் பெற வேண் டும்.  அதற்கு எதிராகப் போராடுகிற மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக் கும் தாக்குதலை கண்டித்தும், தேசத்தின் இறையாண்மையை  பாதிக்கும் பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை கண்டித் தும் ஜன. 8 ஆம் தேதியன்று மத் திய தொழிற்சங்கங்களின் சார்பில்  அகில இந்திய பொதுவேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இப் போராட்டத்தை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு மற்றும் பவானி பகுதிகளில் ஜனவரி 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த  இக்கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

;