tamilnadu

கிரைய பத்திரம் வழங்காமல் இழுத்தடிக்கும் குடிசைமாற்று வாரியம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பெண் முறையீடு

ஈரோடு, செப். 23- குடிசை மாற்று வாரிய மனைக் கான முழு தொகையை செலுத்தி யும், கிரையம் செய்த பத்திரத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வ தாக ஈரோடு மாவட்ட ஆட்சிய ரிடம் பெண் ஒருவர் புகார் மனு அளித்தார். ஈரோடு, ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகர் இரணியன் வீதியை சேர்ந்தவர் மல்லிகா (55). இவரது மகன் அருள்ராஜ். இவர்கள் இருவரும் திங்களன்று மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனி டம் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, கடந்த 1988 ஆம் ஆண்டு  தமிழ்நாடு குடிசை மாற்று வாரி யம் மூலம் நாங்கள் வசிக்கும் மனையை வாங்கினோம். அந்த இடத்துக்கான முழு தொகையும் செலுத்தி விட்டோம்.  தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி திட்டத்தில் இந்த மனையை பெற் றதால், அவர்களின் விதிப்படி 20  ஆண்டுகளில் மனையை கிரையம் செய்து, கிரைய பத்திரத்தை வழங்க வேண்டும். இதற்காக, கடந்த 2014 முதல் கோவை குடிசை மாற்று வாரிய மண்டல அலுவலகம், திருப்பூர் பொறியா ளர் அலுவலகம், ஈரோடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கும் அலைந்து வருகிறோம். ஆனால் வீட்டு வசதி வாரியத்தினர் பத்தி ரத்தை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். எங்களைப்போல, ஏழு பேர் முழு தொகையையும் செலுத்தி விட்டனர். பெரும்பாலானவர்கள், குறிப்பிட்ட தொகையை செலுத்தி உள்ளனர். இவர்களில் யாருக்கும் பத்திரத்தை வழங்காமல் இழுத் தடிப்பு செய்கின்றனர். பத்திரம் கிடைக்காததால், அந்நிலத்தில் வீடு கட்டுதல், விரிவாக்கம் செய் தல், கடன் பெறுதல் போன்ற எந்த பணியும் செய்ய முடிய வில்லை. ஆகவே, எங்களுடைய இடத்திற்கான கிரைய பத்திரத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கூறி யுள்ளனர்.