ஈரோடு, ஜூலை 10- மெடிக்கல் பில் வழங்குவதில் காலதாமதம் செய்வதை கண் டித்து பிஎஸ்என்எல் டிஒடி ஓய்வூ தியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டனர். ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் மெடிக்கல் பில் மற்றும் காலதாமதமாகும் மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றை உட னடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய பிஎஸ்என்எல் டிஒடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் புதனன்று பல்வேறு இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாநில உதவிச் செய லாளர் எல்.பரமேஸ்வரன், மாநி லச் செயலாளர் என்.குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மணி, மாநில உதவி செயலாளர் வி.மணி யன், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் சி.பரம சிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவை
கோவையில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.வெங்கட்ராமன், பங்கஜவல்லி, உமாமதி, பிரான் சிஸ்ஜோசப், குடியரசு, நிசார் அகமது ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். அரசு மற்றும் பொதுத்துறை நிறு வனங்களின் ஓய்வூதியர் சங்க நிர்வாகி சந்திரன் போராட் டத்தை வாழ்த்தி உரையாற்றி னார். முன்னதாக, இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றோர் மத்திய அரசே, பிஎஸ்என்எல் நிர்வாகத் திற்கு நிதி ஒதுக்கீடு செய். வய தானவர்களின் உயிரோடு விளை யாடதே என ஆவேச முழக்கங் களை எழுப்பினர்.