tamilnadu

வாக்கு எண்ணும் மையங்களில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

ஈரோடு, ஜன. 1- ஈரோடு மாவட்டம் முழுவதும்  டிச. 27, 30 ஆகிய தினங்களில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் களுக்கான வாக்கு எண்ணும் பணி வியாழனன்று காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித் துள்ளதாவது, வாசவி கலை மற் றும் அறிவியல் கல்லூரி, சித் தோடு, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, மொடக்குறிச்சி, ஸ்ரீ சங்கர வித்யாசலா ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, கொடுமுடி, அரசு  மகளிர் உயர்நிலைப்பள்ளி, பெருந்துறை, குமரப்பா செங்குந் தர் உயர்நிலைப்பள்ளி, முகா சிப்பிடாரியூர், சென்னிமலை, அரசு உயர்நிலைப்பள்ளி, சிங்கம் பேட்டை, அரசு ஆண்கள் உயர் நிலைப்பள்ளி, அந்தியூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பவானி, கோபி கலை மற்றும் அறி வியல் கல்லூரி, கோபிசெட்டி பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி, குருமந்தூர்,  அரசு உயர் நிலைப்பள்ளி, பங்களாபுதூர், காம தேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம், அரசு உயர்நிலைப்பள்ளி, பவானிசா கர்,  அரசு உயர்நிலைப்பள்ளி, தாள வாடி போன்ற இடங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடை பெறுகிறது. இப்பணியில் மொத்தம் 3448 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட வுள்ளனர். மேலும், 1400 காவல் துறைப் பணியாளர்களும் பாது காப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட வுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் முகவர்கள் அனுமதிக்கப்படும் நேரம், வாக்குகள் சுற்றுகள் விப ரம், வாக்குகள் எண்ணிக்கை அறை எண், மேஜை விபரங்கள் மற்றும் அறைக்குச் செல்லும் வழி குறித்த தகவல் பலகைகள் அமைப் கப்பட்டுள்ளது.  மேலும் கைப்பேசி எடுத்து வரக்கூடாது. மது அருந்தி விட்டோ, மது பாட்டில்கள் எடுத் துக் கொண்டோ வரக் கூடாது. புகை பிடிக்கக்கூடாது, புகை யிலை பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தீப்பெட்டி, பேனா, மை பாட்டில், மை பேனா எடுத்து வரக்கூடாது. குடிநீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்கள் எடுத்து வரக்கூடாது. தலைக்கவசம் உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை. எந்த விதமான ஆயுதங்களையும் எடுத்து வரக்கூடாது போன்ற நிபந்தனைகள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் வேட்பா ளர்கள், முகவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு களை மீறும் நபர்கள் வாக்கு  எண்ணும் மையத்திற்குள் அனு மதிக்கப்பட மாட்டார்கள் எனவும்,  முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் பொழுது தேர்தல் நடத்தும் அலுவலர்,  உதவித் தேர்தல் நடத்தும் அலு வரால் வழங்கப்பட்ட புகைப்படத் துடன் கூடிய அடையாள அட்டை யுடன் வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

;