tamilnadu

கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்க

ஈரோடு,ஜூன் 21- கீழ்பவானி வாய்க்கால் பகுதி முழுவதும் பராமரிப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ஈரோட்டில் நடைபெற்ற வேளாண்  குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் ஆட்சியர்  சி.கதிரவன் தலைமையில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பேசியதாவது, கீழ்பவானி வாய்க்கால் பகுதி முழுவதும் பராம ரிப்பு பணிகள் விரைந்து செய்யப்பட வேண்டும். புதர் மண்டிக்கிடக்கும் இடங்களில் பொதுப்பணித் துறையி னர் அதிக கவனம் மேற்கொண்டு, சீரமைப்பு பணிகளை விரைவில் செய்து கொடுக்க வேண்டும். கீழ் பவானி பகுதியில் உள்ள தலைமை, பகிர்வு, கிளை வாய்க்கால்கள் உள்ள  பகுதிகளில் பல இடங்கள் ஆக்கி ரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிர மிப்புகளை கண்டறிந்து உடனடி யாக மீட்டு எல்லையில் பனைமரம் நடவு செய்ய வேண்டும். இதே போல், குடிமராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை முறையாக செயல்படுத்துவ தற்காக அதில் ஒப்பந்தம் செய்பவர் கள் பணிகளை கமிட்டி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடுக
 

மேலும், அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் கடுமையான சூறாவளி காற்றால் பல லட்சம் வாழை மரங் கள் சரிந்து விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். இவர்களுக்கு உரிய  இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பால் சொசைட்டிகளில் கடந்த 50 நாட் களுக்கும் மேலாக பில் வழங்கப்பட வில்லை. மேலும் பில் வழங்கும் முறை யானது வரிசையாக நடைமுறைப்ப டுத்த வேண்டும். இதேபோல், சக்தி சர்க்கரை ஆலை இதுவரை ரூ.8 கோடி மட்டுமே கரும்புக்கான பணத்தை வழங்கியுள்ளனர். மேலும் 11 கோடி  ரூபாய் பாக்கி உள்ளது. இதனை  உடனடியாக வழங்க நடவடிக்கை  எடுக்க வேண்டும். 

பட்டா மாறுதலுக்கு அலைக்கழிப்பு
 

இணையம் மூலமாக பட்டா மாறு தல் செய்ய விவசாயிகள் விண்ணப் பித்து உள்ளனர். இந்நிலையில் பட்டா மாறுதல் பெற்று வந்த பின்னர் மாறுதலில் செல்ல ஆவணங்கள் இல்லை என மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். 

மஞ்சள் தொழிற்சாலை 
 

விவசாயிகளின் இடுபொருளான உரம், பூச்சி மருந்து போன்றவை பல மடங்கு விலை உயர்ந்து விட்டது. நெல், கரும்பு, மஞ்சள், வாழை கட்டுப் படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலையை நோக்கி செல்லும் சூழ்நிலை உரு வாகியுள்ளது. எனவே சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி ஒவ்வொரு வருடத்திற்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். மேலும், கடந்த பல வருடங்களாக மஞ்சள் கடும் வீழ்ச்சி அடைந்து உள் ளது. எனவே மஞ்சள் ஒரு குவிண்டா லுக்கு ரூ.15 ஆயிரம் என நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும். ஈரோடு மாநகரில் மஞ்சள் தொழிற் சாலை ஒன்று ஏற்படுத்த வேண்டும். தற்பொழுது நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.