tamilnadu

img

அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்ட கட்டுமானப் பணிகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்

கோபிசெட்டிபாளையம், செப்.21- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் தாலு காவிற்குட்பட்ட வரப்பாளை யத்தில் அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டத்தின் 5ஆவது நீரேற்று நிலைய கட்டுமான பணிகள் தொடக்கவிழா நடை பெற்றது.   ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் தாலுகாவிற்குட்பட்ட வரப்பா ளையத்தில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத் தின் 5ஆவது நீரேற்று நிலைய கட்டுமான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் தமி ழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டி தொடங்கி  வைத்தார்.  இதன்பின்னர் செய்தி யாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறுகையில், இப்பகுதி விவசாயிகளின் 60 ஆண்டுகள் கனவு திட்ட மான அத்திக்கடவு- அவிநாசி திட்டத் திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு மேற்கொண்டார். தற்பொழுது  ரூ.ஆயிரத்து 562 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது என்றார்.  மேலும், 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மீண்டும் தேர்வெழுத நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அந்த தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு காலியாகும் பணியிடங்களை பொறுத்து பணி வாய்ப்பு கள் வழங்கப்படும்.  பணி ஓய்வு பெற்றவர்கள் தாமாக முன் வந்து மாலை நேரத்தில் மாண வர்களுக்கு பயிற்சியளிக்கலாம். வகுப்பறை யில் பாடம் எடுக்க அவர்களுக்கு அனுமதி யில்லை என அவர் தெரிவித்தார்.  முன்னதாக, இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜாகிருஷ்ணன், ஈஸ்வ ரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்  உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

;