tamilnadu

img

ஈராக்கில் மீண்டும் வான்வெளித்தாக்குதல்: 6 பேர் பலி

ஈராக்கில் இன்று மீண்டும் வான்வெளித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதைத்தொடர்ந்து   அமெரிக்கா டாயெப் ஹிஸ்புல்லா படையினர்  மீது  நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.
அதற்குப் பதிலடியாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த தாக்குதலின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் சர்வதேச நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மீண்டும் தாக்குதல் 
இந்நிலையில் இன்று காலை மீண்டும் வடக்கு பாக்தாத் பகுதியில் அமெரிக்க படைகள் வான் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.  
ஈரான் ஆதரவாளர்கள்  சென்ற  அணிவகுப்பை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவ தளபதி சுலைமானிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பேரணியாக செல்ல திட்டமிட்டு இருந்ததால், அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த  வான்வழி தாக்குதலை நடத்தியதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், அமெரிக்காவே நடத்தியதாக ஈராக் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில், 6 பேர் உயிரழிந்திருக்கலாம் என்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 
 

;