tamilnadu

இலங்கை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் சுட்டுக்கொலை

கொழும்பு, ஏப்.28-இலங்கை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. ஒன்பது தற்கொலைப் படை பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தினர். இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்புடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது. இலங்கை ஜனாதிபதி சிறிசேன கூறும்போது, ஐ.எஸ். பயங்கரவாதி களுடன் தொடர்புடைய 130 பேர் இலங்கையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்தார்.இந்தக் குண்டுவெடிப்பு சம்ப வத்தைத் தொடர்ந்து இலங்கைராணுவத்தினரும், காவல்துறை யினரும் பயங்கரவாதிகளைத் தேடி வருகின்றனர்.இந்த நிலையில் இலங்கையின் கிழக்கு மாகாணம் கல்முனை நகரில்சாய்ந்தமருது என்ற இடத்தில் ஒருவீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கி யிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. ராணுவத்தினரும், காவல்துறையினரும் வெள்ளிக் கிழமை இரவு அங்கு விரைந்தனர். அப்போது துப்பாக்கியுடன் இருந்த இரண்டு பயங்கரவாதிகள் ராணுவத் தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவத்தினரும், காவல்துறையினரும் திருப்பிச் சுட்டனர். அவர்களுக்கு இடையே கடும்துப்பாக்கி சண்டை நடந்தது.

திடீரென அந்த வீட்டுக்குள் மூன்று முறை குண்டுகள் வெடித்தன. சிறிதுநேரத்தில் ராணுவத்தினர் வீட்டுக்குள்சென்று பார்த்தபோது மூன்றுதற்கொலைப்படை பயங்கரவாதி களும், துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பேரும் இறந்து கிடந்தனர். வீட்டுக்குள் மொத்தம் ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள், ஆறுகுழந்தைகள் உடல்கள் இருந்தன. வீட்டுக்குள் நடத்திய சோதனையில் அதிகளவில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. ஏராளமான டெட்டனேட்டர்கள், சில துப்பாக்கிகள், தற்கொலைப்படைக்கான கருவிகள், ராணுவச் சீருடைகள், ஐ.எஸ். அமைப்பின் கொடிகள் ஆகியவற்றை ராணுவத்தினர் கைப்பற்றினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அருகிலுள்ள பகுதிகளிலும் பயங்கரவாதி கள் பதுங்கியிருக்கலாம் என்பதால் அந்தப் பகுதி முழுவதும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது. 

முஸ்லிம்கள் அதிகம் வாழும் கல்முனை, சாவலகடே, சம்மாந்துறை ஆகிய இடங்களில் காவல்துறையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். கொழும்பில் ஹோட்டல்கள், பள்ளிகள், பொது மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஜக்ரான் ஹசிம் ஆவார். கல்முனையில் நடைபெற்ற சண்டையில் அவரது தந்தையும், இரு சகோதரர்களும் கொல்லப்பட்டனர். இவர்கள் கொழும்பு தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் சுட்டுக் கொன்ற மூன்று பேரில் ஒருவர் ஹசிமின் தந்தை முகமது ஹசிம், அவருடைய மகன்கள் ஜைனி ஹசிம், ரில்வான் ஹசிம் என காவல்துறையினர் தெரிவிப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம்தெரிவிக்கிறது. இவர்கள் மூவரும் சமீபத்தில் வெளியிட்ட காணொலியில், நம்பிக்கை இல்லாதவர்கள் மீது நாம் போர் தொடுக்க வேண்டும் என பேசியுள்ளனர். ரில்வான் ஹசிம் ஜிகாத்திற்கு அழைப்பு விடுக்கும் காணொலி யில் குழந்தைகள் அழும் சத்தம் கேட்கிறது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

;