tamilnadu

img

இலங்கையில் பர்கா அணியத் தடை


இலங்கையில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து பர்கா அணிய தடைவிதித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு இலங்கை அரசு தடை விதித்தது. இலங்கையில், தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்த சூழலில், இலங்கையில் பொது இடங்களில் பர்கா உள்பட முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கை அதிபர் சிறிசேனா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். 

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் முகத்தை மூடும் வகையிலான உடைகளை அணிய யாருக்கும் அனுமதியில்லை என்றும் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


;