சென்னை, மார்ச் 27- நடிகரும் இளம் மருத்துவருமான சேது ராமன் வியாழனன்று (மார்ச் 26) இரவு மார டைப்பால் காலமானார். அவருக்கு வயது 37. நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்ப ரும் தோல் சிகிச்சை மருத்துவருமான சேது ராமன், ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் சந்தானம் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் சேதுராமன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருந்தனர்.
எம்.பி.பி.எஸ்., எம்.டி படித்த இவர்,மும்பையிலும், சிங்கப் பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார். தோல் மருத்துவம் படித்துள்ள இவர் சென்னை யில் மருத்துவமனை நடத்தி வந்தார். இன்ஸ்டாகிராமில் கொரோனா விழிப்புணர்வு குறித்து மக்களிடையே பிரச்சா ரம் செய்திருந்தார்.சினிமாவிலும் கவனம் செலுத்திய இவர், வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50-50 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர் மார டைப்பால் காலமானார். இது சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.சேது ராமன் இறந்ததை நடிகர் சதீஷ், தனது டுவிட்டரில் உறுதிப் படுத்திள்ளார்.