tamilnadu

img

ஆர்எஸ்எஸ் திட்டத்தை மக்களிடம் பரப்புவதா? : கி.வீரமணி கண்டனம்

சென்னை, மே 2- ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி தொலைக்காட்சிகளில் இராமாயணம் போன்ற ஹிந்து இதிகாசங்களைப் பரப்பு வது  கண்டிக்கத்தக்கது என்று  திராவிடர் கழகத் தலைவர்   கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில் கரோனாவின் கொடுமையிலிருந்து நாட்டு மக்களுக்குப் புதுவாழ்வு தர - பொருளா தார நடவடிக்கையாக மேலும் 65,000 கோடி ரூபாய் தேவைப்படும் என்று முன்னாள் ரிசர்வ்  வங்கி கவர்னரும், பொருளாதார நிபுணரு மான ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும் நிலையில், பொரு ளாதாரம் எங்கே முட்டுச் சந்தில் நிற்குமோ என்ற நிலையில், நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடத்தை 1000 கோடி ரூபாய் செல வில் கட்டுவது இப்போது தேவைதானா?

ஹிந்துத்துவாவை மறைமுகமாகத் திணிக்கும் சன்னமான வேலையும் நடை  பெற்று வருகிறது. ராமாயணத் தொடரை தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் ஒளி பரப்பி, பக்திப் போதையை உருவாக்கிடும் இம்முயற்சி - அரசமைப்புச் சட்டத்தின் மதச்  சார்பற்ற கோட்பாட்டிற்கு முரணான தல்லவா?

அதுபோலவே கரோனா தடுப்புக்கு  புனித  கங்கை நீர் தரலாம். கொரோனாவை குணப்ப டுத்த இந்த தண்ணீர் உதவுமா என ஆராய்ச்சி  செய்யுமாறு  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வந்துள்ள  செய்தியும் வேடிக்கையானது. கரோனா நோயுற்ற மக்களுக்கு பிளாஸ்மா  சிகிச்சையே கூட ஆய்வாளர்களால் இன்று முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத நிலை யில், இப்படி விசித்திரமான கோரிக்கைகள் தேவையா? என்றும் அவர் வினவியுள்ளார்.

;