ராமேஸ்வரம் கோயில் சுவாமி நகைகளின் எடை குறைந்த விவகாரத்தில் 30 குருக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி திருவிழா, சித்திரை திருவிழா, ஆடி திருவிழா போன்ற நிகழ்வுகளில் ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மனுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நகைகள் அணிவிக்கப்படும். திருவிழா முடிவுந்தவுடன் கோயில் குருக்கள் நகைகளை கருவூலத்தில் வைத்துவிடுவர். இந்நிலையில்தான் 40 ஆண்டுகளுக்கு பின் நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் கடந்த ஆண்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கோயில் நகைகளின் எடைகுறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நகைகளை கையாளும் குருக்கள் மற்றும் ஓய்வு பெற்ற 30 குருக்களிடம் அபராத தொகையுடன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.